தமிழகத்தில் கருணாநிதி, எம்.ஜி.ஆர். அரசை கலைத்தது யார்? பிரதமர் மோடி ஆவேச கேள்வி

காங்கிரஸ் இல்லாமல் இருந்திருந்தால் சீக்கிய கலவரமும், மத வெறுப்பும் ஏற்பட்டிருக்காது என பிரதமர் மோடி ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
காங்கிரஸ் இல்லாமல் இருந்திருந்தால் சீக்கிய கலவரமும், மத வெறுப்பும் ஏற்பட்டிருக்காது என பிரதமர் மோடி ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். குடும்ப கட்சியால் நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய பிரதமர், குடும்பத்தை தாண்டி காங்கிரஸ் கட்சியால் சிந்திக்க முடியாது என்றார்.காங்கிரஸ் கட்சி மட்டும் இல்லாமல் இருந்ததிருந்தால், அரசரநிலை பிரகடனம் மூலம் இந்தியா ஜனநாயகத்தை இழந்திருக்காது என்றார்.தொடர்ந்து ஆவேசமாக பேசிய மோடி, காங்கிரஸ் இல்லை என்றால் காஷ்மீரை விட்டு பண்டிட்கள் வெளியேறி இருக்க மாட்டார்கள் என்றும்,சீக்கிய கலவரம் நடைபெற்றிருக்காது என்றும், மத வெறுப்பு ஏற்பட்டிருக்காது என்றும், இந்தியா ஏழை நாடாக இருந்திருக்காது என்றும் தெரிவித்தார்.குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது காங்கிரஸ் தலைமையிலான டெல்லி தன்னை அவமானப்படுத்தியதாக கூறிய பிரதமர், காங்கிரஸ் ஆட்சியில் மாநில அரசுகள் தூக்கி எரியப்பட்டதாகவும்,100முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதாகவும், மாநில அரசுகள் கலைக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.தேசத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சனை இருந்ததால் தனது பெயரை இந்திய தேசிய காங்கிரஸ் என்பதற்கு பதிலாக இந்திய காங்கிரஸ் கூட்டமைப்பு என்று மாற்றிக் கொள்ளலாம் என கூறினார்.மேலும், நாட்டில் எமர்ஜென்சி அமலான போது தமிழகத்தில் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர். அரசை கலைத்தது யார் எனவும் பிரதமர் மோடி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.பிரதமரின் இந்த ஆக்ரோஷ பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்