நகர்புற உள்ளாட்சி தேர்தல் - களத்தில் குதித்த விஜய் மக்கள் இயக்கம்!

தாம்பரம் மாநகராட்சி 53வது வார்டுக்கு விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர் விஜய் ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்தார்.
x
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டுக்கல் மாநகராட்சியில் போட்டியிடுவதற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ஒரு பெண் உள்பட 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்றுவரை திண்டுக்கல் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 53 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 3 வார்டுகளில் உறுப்பினர் பதவிகளுக்கு ஒரு பெண் உட்பட 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளதாகவும், நாளையும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தாம்பரம் மாநகராட்சி 53வது வார்டுக்கு விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர் விஜய் ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்தார். தற்போது நடைபெறவிருக்கும் நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தாம்பரம் மாநகராட்சி 53 வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் என்.வி.ராஜேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் பெருங்களத்தூர் மண்டல அலுவலகத்தில் விஜய் ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்