"விசிகவுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும்"திருமாவளவன் கோரிக்கை

முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், விசிகவுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
x
முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், விசிகவுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். விசிக- திமுக இடையே இட பங்கீடு பேச்சுவார்த்தை * மாவட்ட அளவில் இட பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது * நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து பேச்சுவார்த்தை * நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விசிகவுக்கு போதிய இடங்கள் ஒதுக்க வலியுறுத்தல் * விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார் * சமூக நீதியை பாதுகாக்கும் தேவையை உணர்ந்து முதலமைச்சர் முயற்சி எடுத்துள்ளார் * மதவாத சக்திகள் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள் * தஞ்சை பள்ளி மாணவி மரணத்தை சிலர் அரசியலாக்க முயற்சிக்கிறார்கள் * மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் * மாநகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிக்கு போட்டியிட விசிகவுக்கு வாய்ப்பு வழங்க கோரிக்கை * அரசு அதிகாரிகளை அவமதிப்பதோ, தாக்குதல் நடத்தவோ கூடாது * முடிந்த அளவுக்கு கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல கோரிக்கை விடுத்துள்ளோம் - திருமாவளவன்


Next Story

மேலும் செய்திகள்