"தமிழிசை செளந்தரராஜன் தன்னுடைய முடிவை மாற்றி கொள்ளவேண்டும்"

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், நிர்வாகத்தை துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக செய்து வருவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
x
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், நிர்வாகத்தை துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக செய்து வருவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோவில், இந்திய சரித்திரத்தில் ஒரு ஆளுநர் 2 மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேசியக்கொடி ஏற்றி சம்பவம் எங்கும் நடந்ததில்லை என கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொடி ஏற்ற தமிழிசை செளந்தரராஜனுக்கு உரிமை உள்ளது. ஆனால், புதுச்சேரி, தெலங்கானா என 2 மாநிலங்களிலும் கொடியேற்றுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழிசை செளந்தரராஜன் தன்னுடைய முடிவை மாற்றி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று முதலமைச்சர் ரங்கசாமி கொடியேற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்