திமுகவிற்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள் - சேலத்தில் பரபரப்பு
சேலத்தில் அதிமுக ஒன்றியக்குழுத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் திமுகவிற்கு ஆதரவாக வாக்களித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் அதிமுக ஒன்றியக்குழுத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் திமுகவிற்கு ஆதரவாக வாக்களித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம்13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 பேர் திமுகவையும், 6 பேர் அதிமுகவையும், ஒருவர் பாமகவை சேர்ந்தவர்கள். ஒன்றிய குழுத்தலைவராக அதிமுகவின் ஜெகநாதன் உள்ள நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுகவினர் கொண்டு வந்துள்ளனர். இதனிடையே, அதிமுகவை சேர்ந்த 2 பெண் கவுன்சிலர்களான சங்கீதா மற்றும் பூங்கொடியை திமுகவினர் கடத்தியதாக கூறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜெகநாதனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கீதா மற்றும் பூங்கொடி இருவரும் திமுகவிற்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். தங்களை யாரும் கடத்தவில்லை என்றும், விருப்பப்பட்டே வாக்களித்து இருப்பதாகவும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.
Next Story