பொங்கல் பரிசு விவகாரம்- சவால் விடும் அமைச்சர் சக்கரபாணி
பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல் பற்றி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்னுடன் விவாதம் நடத்த தயாரா? என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சவால் விடுத்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல் பற்றி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்னுடன் விவாதம் நடத்த தயாரா? என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சவால் விடுத்துள்ளார்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சில இடங்களில் வழங்கப்பட்ட தரமற்ற பொங்கல் பொருள்கள் மாற்றி கொடுக்கப்பட்டதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் என மொத்தம் 45 கிராம் எடையுள்ள பொருட்களுக்கு 45 ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் 50 கிராம் முந்திரி பருப்பு, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய் ஆகிய 110 கிராம் எடை கொண்ட பொருட்களுக்கு 62 ரூபாய் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின் இறுதியில் 1 கிலோ பருப்பு 120 ரூபாய் என்ற விலையில் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்துவிட்டு ஒரு கிலோ பருப்பு 78 ரூபாய் முதல் 86 ரூபாய் வரையில் கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த கொள்முதலில் மட்டும் ஒரு மாதத்திற்கே 74 கோடியே 75 லட்சம் ரூபாய் அரசால் மீதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு கொள்முதல் பற்றி தன்னுடன் விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
விவாதத்திற்கு தயார் இல்லையென்றால் தனது தவறான குற்றச்சாட்டிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Next Story