பஞ்சாப் தேர்தல் தேதி மாற்றம்

14ஆம் தேதி நடைபெற இருந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 20ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
பிப்ரவரி 14 ஆம் தேதி பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில் ஒரு வார காலத்திற்கு தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஏனெனில், பிப்ரவரி 16ஆம் தேதி ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் வாரணாசிக்கு புனிதப் பயணம் மேற் கொள்வார்கள் என்பதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ், பாஜக, சிரோன்மணி அகாலிதளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்