உ.பி. சட்டமன்ற தேர்தல் - பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு இன்று வெளியாகலாம் ?

உத்திரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை இன்று, பாஜக இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
x
உத்திரபிரதேசத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சிகள் போட்டியிடுகின்றன. தேர்தலில் போட்டியிட அப்னா தள் கட்சி 25 தொகுதிகளை கேட்ட நிலையில் அதிகபட்சமாக 14 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது. நிஷாத் கட்சி 30 தொகுதிகளை கேட்ட நிலையில் 17 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கான வேட்பாளர்கள் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். இந்த நிலையில் தொகுதி பங்கீடும், வேட்பாளர் அறிவிப்பும் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்