ராமர் பெயரால் பாஜக முறைகேடு. ! - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு..!

அயோத்தியில், ராமர் கோயிலுக்காக தலித்களின் நிலங்கள் பறிக்கப்படுவதாக பிரியங்கா காந்தி எம்.பி. பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
x
அயோத்தியில், ராமர் கோயிலுக்காக தலித்களின் நிலங்கள் பறிக்கப்படுவதாக பிரியங்கா காந்தி எம்.பி. பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் கட்டுமானம் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ப்ரியங்கா காந்தி, கோயில் கட்டுமானத்துக்கான நிதி வசூலில், பக்தியை வைத்து விளையாடுவதாக குற்றம்சாட்டினார். அயோத்தி கோயிலை சுற்றி உள்ள இடத்தை குறைந்த விலைக்கு வாங்கும் ஆளும் கட்சியினர், அதை பல மடங்கு உயர்த்தி, ராமர்கோயில் அறக்கட்டளையிடம் விற்பதாக கூறிய பிரியங்கா, 2 கோடி ரூபாய்க்கு வாங்கும் நிலத்தை, 10 கோடி ரூபாய்க்கு விற்பதாகவும் குற்றம்சாட்டினார். இதில், பாஜகவினர், அதிகாரிகள் உள்ளதாகவும், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்பது தெரியவில்லை என்ற அவர், ராமரின் பெயரால் பாரதிய ஜனதா ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி உள்ளார். மாவட்ட அதிகாரி மேயரை விசாரிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரிக்கவும் ப்ரியங்கா வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்