முதல்வர் ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பாக பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருகிற 24-ஆம் தேதி எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அம்பேத்கர் சுடர் விருது தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழங்கப்படவுள்ளது. எனவே இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சரை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story