"கருணாநிதி, ஸ்டாலின் குறித்து கொச்சை பேச்சு" - தள்ளி விடப்பட்ட மைக்... இருதரப்பு மோதல்

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பேச்சால், திமுக, நாம் தமிழர் கட்சி இடையே மோதல் ஏற்பட்டது.
x
முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பேச்சால், திமுக, நாம் தமிழர் கட்சி இடையே மோதல் ஏற்பட்டது.  

மொரப்பூர் பேருந்து நிலையத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரிய ஆர்ப்பாட்டத்தில், அதிமுக மற்றும் திமுக தரப்பையும், மறைந்த கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் கொச்சையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மரியாதையாக பேசுமாறு அறிவுறுத்தியபடி மேடையில் ஏறிய மொரப்பூர் திமுக ஒன்றியச் செயலாளர் செங்கண்ணன், மைக்கை கீழே தள்ளினார். இதனால், இருதரப்புக்கும் மோதல் வெடித்தது. அங்கிருந்த நாற்காலிகள் பறக்கவிடப்பட்டன. இருதரப்பையும் போலீசார் சமாதானப்படுத்தினர். இதனிடையே, அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கூட்டம் நடத்தியதாக நாம் தமிழர் கட்சியினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்