எம்.எல்.ஏ. பெயர் இல்லை - அதிமுக, திமுக உறுப்பினர்கள் இடையே தள்ளுமுள்ளு

சிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி சங்க பேரவை கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே தள்ளுமுள்ளி ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
x
தஞ்சையில் நடைபெற்ற சிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி சங்க பேரவை கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே தள்ளுமுள்ளி ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  நிக்கல்சன் நகர கூட்டுறவு வங்கியின் 116 ஆவது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. அதில், வெளியிட்ட ஆண்டறிக்கை புத்தகத்தில் முதலமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் வங்கி நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றன. எனினும், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கொறடா புகைப்படங்கள் இடம் பெறாததை கண்டித்து திமுக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை கண்டித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியாக கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு நாட்டுப்பண் பாடல் ஒலிக்கப்பட்தால் அனைவரும் கலைந்து சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்