"தவறு செய்யும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி

தவறு செய்யும் காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
x
தவறு செய்யும் காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிலரின் செயல்பாடுகள் உள்ளதாக கூறியுள்ளார்.

மதுரையில் இளம்பெண்ணை மிரட்டி காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

கல்பாக்கம் காவல் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர், சக காவலர்கள் தரக்குறைவாக திட்டுவதாக புகார் அளித்துள்ளார் என்றும்,

தலைமை செயலகத்தில், ராணுவ வீரரிடம் வழிப்பறி சம்பவம் நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், விழுப்புரத்தில், காவலர்கள் தாக்கியதில், வியாபாரி உயிரிழந்த சம்பவம், 

மற்றும் ராமநாதபுரத்தில் விசாரணைக்காக அழைத்துசெல்லப்பட்ட இளைஞர் வீட்டில் உயிரிழந்த சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நேர்மையான அதிகாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சரியான பணியிடங்களை வழங்குங்கள் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,

தவறு செய்யும் காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்