எப்படி இருக்கீங்க..!! தமிழில் நலம் விசாரித்த மத்திய அமைச்சர் - நாடாளுமன்றத்தில் சுவாரசியம்

மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலுவிடம் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி தமிழில் நலம் விசாரித்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
x
மக்களவையில்  திமுக  உறுப்பினர் டி.ஆர்.பாலுவிடம் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி தமிழில் நலம் விசாரித்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, ரயில்வே கண்டெய்னர்கள் உற்பத்தி செய்வதற்கான அனைத்து திறன்களும் இருந்தும் பொன்மலை பணிமனை டெண்டரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை என டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார். இந்த நிலை நீடித்தால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட பொன்மலை பணிமனை எப்படி சிறப்பாக இயங்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்க எழுந்த  மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,  வணக்கம் என்று தமிழில் கூறியதோடு, எப்படி இருக்கீங்க என டி.ஆர் பாலுவை தமிழில் நலம் விசாரித்தார். பின்னர் ஆங்கிலத்தில் பதிலளித்த அவர், பொன்மலை பணிமனை டெண்டரில் பங்கேற்க முடிந்தளவு இந்திய கண்டெய்னர் உற்பத்தியாளர்களை தாங்கள் ஊக்குவித்து வருவதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்