சட்டமன்றத்தில் ஓபிஎஸ் அணுகுமுறை - ஆரோக்கியமான அரசியல்?

தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணை தலைவர் ஒ.பன்னீர்செல்வத்தின் அணுகுமுறைகள், தமிழக அரசியல் களத்தை ஆரோக்கியமான களத்திற்கு எடுத்து செல்பவையாக உள்ளன...
x
தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி  துணை தலைவர் ஒ.பன்னீர்செல்வத்தின் அணுகுமுறைகள், தமிழக அரசியல் களத்தை ஆரோக்கியமான களத்திற்கு எடுத்து செல்பவையாக உள்ளன...   

சட்டமன்றத்தில் மத்திய அரசின் வேளாண்மை சட்டத்தை ரத்துசெய்யக்  கோரி முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்த போது, எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது, அதிமுக

அப்போது  அமைச்சர் துரைமுருகன், ஓபிஎஸ் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்... ஆனால் சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்த அதிமுகவினர், அவைக்குள் வந்தனர். 

 
அப்போது எழுந்து பேசிய துரைமுருகன், பன்னீர்செல்வம் குறித்து தாம் பேசிய கருத்தை திரும்ப பெறுவதாகவும், அதனை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிடுங்கள் என்றும் சபாநாயகரிடம் கேட்டு கொண்டார். 

 
இதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம், அமைச்சர் துரைமுருகன் மீது தனிப்பட்ட முறையில் தமக்கு மரியாதை உள்ளதாக தெரிவித்ததோடு, தன் நிலை குறித்து பாடல் ஒன்றை பாடினார். 

 
நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இடையே இறைவனின் சிரிப்பு... இதுதான் என் நிலை  என்று அவர் கூறிய போது, அவையில் சிரிப்பொலி எழுந்தது. 

 
பின்னர் துரைமுருகனை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்த போது பேசிய பன்னீர்செல்வம், 
அனைவரது உள்ளங்களை கவர்ந்தவர் துரைமுருகன் என்றும், 

 
2001ம் ஆண்டில் இருந்து அவரது சபை நடவடிக்கைகளை தாம் கவனித்து வருவதாகவும், உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் துரைமுருகன் என்றும் புகழ்ந்து பேசினார். 

 
மேலும், துரைமுருகன் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
பிறகு கருணாநிதி நினைவிடம் அமைக்க இருப்பதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட போது, அதற்கு தனது மனமார்ந்த வரவேற்பை தெரிவித்தார், பன்னீர்செல்வம். 

 
மேலும், அண்ணாவின் குடையின் கீழ் பாடம்கற்றவர்கள் நாம் என்று குறிப்பிட்ட ஓ.பி.எஸ்., தனது தந்தை கருணாநிதியின் தீவிர ரசிகர் என்றும், 

 
அவர் வசனம் எழுதிய மனோகரா,பராசக்தி ஆகிய படங்களின் வசனபுத்தகங்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்போம் என்றும் பேரவையில் தெரிவித்தார். 

எதிர்கட்சியாக இருந்தாலும் மாறுபாடுகளை கலைந்து, ஆரோக்கியமான அரசியல் களத்திற்கு எடுத்து செல்லும் ஓபிஎஸ்ஸின் சட்டமன்ற பேச்சுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்