7 கோடி பாலோவர்ஸ்... உலக அளவில் பிரதமர் மோடி முதலிடம்!

பிரதமர் மோடியை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளது. உலக அளவில் அரசியலில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் தலைவர்களில் அதிகமான பின்தொடர்வோருடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.
x
பிரதமர் மோடியை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளது. உலக அளவில் அரசியலில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் தலைவர்களில் அதிகமான பின்தொடர்வோருடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.
 
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டுவிட்டரில் இணைந்த பிரதமர் மோடி, சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் தலைவர்களில் ஒருவராவார். 
 
படிப்படியாக அவரை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலையில் அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 6 கோடியை தொட்டது.
 
இவ்வாண்டு மேலும் அதிகரித்து அவரது கணக்கை பின்தொடர்வோர், 7 கோடியை தாண்டியுள்ளது.

 அவரையடுத்து போப் பிரான்சிஸ் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 5 கோடியே 30 லட்சமாக உள்ளது.
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 2 கோடியே 63 லட்சம் பேரும், 

 காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியை ஒரு கோடியே 94 லட்சம் பேரும் டுவிட்டரில் பின்தொடர்கிறார்கள். 

 அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் டுவிட்டர் கணக்கை பின் தொடர்வோர் எண்ணிக்கை 12 கோடிக்கும் அதிகமாக உள்ளது. 
 
தற்போதைய அதிபர் ஜோ பைடன் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 3 கோடியே 90 ஆயிரமாக உள்ளது.

அமெரிக்காவின் மற்றொரு முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 8 கோடியே 87 லட்சமாக இருந்தாலும், அவருடைய கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்