மேகதாது அணை கட்டும் விவகாரம்;தமிழக அரசு அரசியல் ஆதாயம் தேட முயற்சி - கர்நாடக உள்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

மேகதாது அணை விவகாரத்தில், தமிழக அரசு அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டி உள்ளார்.
x
மேகதாது அணை விவகாரத்தில், தமிழக அரசு அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடக அரசுக்கு, சட்ட ரீதியாக அனைத்து விஷயங்களும் சாதகமாக இருப்பதாக தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்த பின்னர் தமிழகத்துக்கு மிகவும் கடினமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாகவும்,...

மேகதாது விவகாரத்தை பொருத்தமட்டில்  அணை கர்நாடக எல்லைக்குள் அமைவதாகவும், தமிழகத்துக்கு செல்லும் தண்ணீருக்கு தாங்கள் எந்த தடையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

அரசியல் ஆளுமையை உயர்த்தி காட்டுவதற்காக சின்ன விஷயத்தை தமிழக அரசு பெரிதுபடுத்தி காட்டுவதாக கூறிய பசவராஜ் பொம்மை,...

மார்க்கண்டேய நதி விவகாரத்திலும் தமிழக அரசு பிரச்சனையிருப்பதாக கூறிவருவதாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்