"மருத்துவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" - கமல்ஹாசன் கோரிக்கை

இரவு பகல் பாராமல் உழைக்கும் அரசு மருத்துவர்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
x
இரவு பகல் பாராமல் உழைக்கும் அரசு மருத்துவர்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், பெருந்தொற்று தீவிரமடைந்த சூழலில் ஓராண்டுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து தன்னலமற்ற சேவை ஆற்றி வரும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். அரசு மருத்துவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளாமல் தமிழ்நாடு அரசு சிலருக்கு மட்டுமே ஊதியம் வழங்கி இருப்பது ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இரவு பகல் பாராமல் உழைக்கும் அரசு மருத்துவமனைகளில் கருத்தில் கொண்டு அவர்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்