"ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
x
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த  வேண்டும் என, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

card 1
கடந்த 10-ம் தேதி  புதுக்கோட்டையிலுள்ள வடதெரு என்ற கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிப்பை, பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட நிலையில்,
card 2
 காவிரிப்படுகையில், ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்ய ஆழ்குழாய் கிணறுகளை அமைக்க கூடாது என்பது தான், தமிழக அரசின் கொள்கை என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 
card 3
எதிர்காலங்களில் தமிழகத்தின் எந்த பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டுவரக்கூடாது என்றும் 
card 4
தமிழகத்தில், ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

காவிரிப்படுகையின் வளத்தை கண்ணை இமை காப்பது போல அரசு காக்கும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடித்ததில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.Next Story

மேலும் செய்திகள்