"காங்கிரசுக்கு பெரிய அறுவை சிகிச்சை தேவை" - காங். மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து

காங்கிரஸ் கட்சி குடும்ப பெருமையை மட்டுமே சார்ந்து இருக்க கூடாது என்றும், கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
x
காங்கிரஸ் கட்சி குடும்ப பெருமையை மட்டுமே சார்ந்து இருக்க கூடாது என்றும், கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முக்கிய பொறுப்புகளில் திறமையற்ற நபர்களை நியமிக்க கூடாது என்றும், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வீர‌ப்ப மொய்லி வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி ஒன்றும் தோற்கடிக்க முடியாதவர் அல்ல, என்றும் மோடியின் அரசியலை எதிர்கொள்ள காங்கிரஸ் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வீரப்ப மொய்லி தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சீரமைத்து விட்டால் வரும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை எளிதில் வீழ்த்தி விடலாம் என்றும்,

அடுத்த ஆண்டு நடைபெறும் 7 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது சிக்கலாகிவிடும் என்பதால் 

காங்கிரஸ் கட்சி இன்னும் தாமதிக்காமல் இப்போதே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் வீர‌ப்ப மொய்லி குறிப்பிட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்