"எதன் அடிப்படையில் 12ம் வகுப்பு மதிப்பெண் வழங்குவார்கள்?" - கார்த்தி சிதம்பரம் எம்.பி. கேள்வி

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்திருக்கக் கூடாது என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
எதன் அடிப்படையில் 12ம் வகுப்பு மதிப்பெண் வழங்குவார்கள்? - கார்த்தி சிதம்பரம் எம்.பி. கேள்வி
x
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்திருக்கக் கூடாது என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், அனைத்து கல்லூரிகளிலும் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கும் நிலையில், எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப் போகிறார்கள் என கேள்வி எழுப்பினார். மேலும், இந்தியா முழுவதுமே இந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்கள் அனைவரும், கல்வியில் பின்தங்கி விட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்