"பணம் பறிப்பதே நடிகை சாந்தினியின் நோக்கம்" - முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

நடிகை சாந்தினி தன் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
x
நடிகை சாந்தினி தன் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், சமுதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலாக நடிகை செயல்பட்டு வருவதாகவும் மலேஷியாவில் இதுபோல பலரையும் சாந்தினி மோசடி செய்துள்ளதாக புகார்கள் உள்ளன என்றும் அந்த மனுவில் மணிகண்டன் தெரிவித்துள்ளார். நடிகையை கருக்கலைப்பு செய்யும்படி மிரட்டவில்லை என்றும், அவராகவே கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். சினிமா வாய்ப்பு இல்லாததாலும், பெற்றோரின் மருத்துவ சிகிச்சைக்காகவும் உதவி கேட்டதால் பரணி என்பவர் மூலம் 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், அதை பரணி திருப்பி கேட்டது முதல் தன்னை பிளாக்மெயில் செய்ய துவங்கியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், நடிகை சாந்தினியை தான் மிரட்டவில்லை என்றும், ஆரம்பகட்ட விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல், தனக்கு எதிராக அவசர அவசரமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மணிகண்டனின் இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்