"காணொலி மூலம் நம் கடமைகளை சரியாக செய்ய முடியும்" - பிரதமர் நரேந்திர மோடி

காணொலி மூலம் நாம் அனைவரும் நம் கடமைகளைச் சரியாகச் செய்ய முடியும் என்பதை கோவிட் நமக்குக் கற்பித்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
காணொலி மூலம் நம் கடமைகளை சரியாக செய்ய முடியும் - பிரதமர் நரேந்திர மோடி
x
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வருமானவரித்துறையின் மேல் முறையீடு தீர்ப்பாய அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகத்தை, பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், ஒடிசா முதல்வர், ஒடிசா தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, 5 லட்சம் ரூபாய் வரை ஈட்டப்படும், வருமானத்திற்கு வரி இல்லை என்றும், இது கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பயனளிக்கிறது என்றும் கூறினார்.  காணொலி மூலம் நாம் அனைவரும் நம் கடமைகளைச் சரியாகச் செய்ய முடியும் என்பதை கோவிட் நமக்குக் கற்பித்துள்ளது. எனவே, சீர்திருத்தங்களை கொண்டு வருவது கடினமான சவால் அல்ல, என்றும், இது வரி செலுத்துவோரின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்கும் என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்