பீகார் தேர்தல் வெற்றி - மிகப்பெரிய சாதனை என பிரதமர் மோடி பெருமிதம்

பீகார் தேர்தல் வெற்றிக்கு, தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனா காலத்தில் இது மிகப்பெரிய சாதனை என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தல் வெற்றி - மிகப்பெரிய சாதனை என பிரதமர் மோடி  பெருமிதம்
x
 டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். இதில் பா.ஜ.க. தலைவர் நட்டா, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்கள் நம்பிக்கை பா.ஜ.க.வினருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்  என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், வேலை செய்பவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பது தேர்தலில் நிரூபணமாகி உள்ளதாகவும், 
பா.ஜ.க. மீதான மக்களின் அன்பு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பதாகவும் குறிப்பிட்டார். இளைஞர்கள் தங்களுடைய கனவை நனவாக்க தாமரையை கையில் எடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தொண்டர்கள் இடையே உரையாற்றிய அவர், நாட்டிலுள்ள ஒவ்வொரு இளைஞரும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து நாட்டுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குடும்பம் மற்றும் குடும்ப கட்சிகள் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 
Next Story

மேலும் செய்திகள்