மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்குமா பா.ஜ.க.?

மத்திய பிரதேசத்தில் சிவசராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி தொடருமான என்பதை முடிவு செய்யும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்குமா பா.ஜ.க.?
x
மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள  28 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நாளை இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதில், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க. 9 இடங்களில் வெற்றி பெற வேண்டும். காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் வென்றால் தான் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும். குறைந்த பட்சம் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட முடியும் என கூறப்படுகிறது. 

இந்த தேர்தல் முடிவுகள் தற்போதைய முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒன்றாக உள்ளது. 

அதே சமயம் காங்கிரஸில் இருந்து 22 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து, பா.ஜ.க.வில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா எதிர்காலம் என்ன என்பதை இந்த தேர்தலில் முடிவுகள் தெள்ள தெளிவாக காட்டிவிடும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்