தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டம் - படேல் சிலைக்கு பாதபூஜை செய்த பிரதமர்

தேசிய ஒற்றுமை தினமான படேல் பிறந்த நாள் விழாவில் குஜராத்தில் உள்ள அவரது மாபெரும் சிலைக்கு, மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டம் - படேல் சிலைக்கு பாதபூஜை செய்த பிரதமர்
x
தேசிய ஒற்றுமை தினமான படேல் பிறந்த நாள் விழாவில், குஜராத்தில் உள்ள அவரது மாபெரும் சிலைக்கு, மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, 'மன்னும் இமயமலை எங்கள் மலையே...' என்ற பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டிய பிரதமர், உரையாற்றினார்.

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் விழா குஜராத் மாநிலம் கெவாடியா பகுதியில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதற்காக உச்சக்கட்ட பாதுகாப்புடன், கெவாடியா பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளின் தனியொருவராக படேல் சிலை அமைக்கப்பட்ட பீடம் மீது ஏறி, அவருக்கு பாதப்பூஜை செய்து மலர்தூவி வழிபட்டார். பின்னர் பாதுகாப்பு படை சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக்கொண்டார். 

இதைத்தொடர்ந்து நடைபெற்ற பாரம்பரிய கலைநிழ்ச்சிகளையும், பிரதமர் நரேந்திரமோடி கண்டு ரசித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், புல்வாமா தாக்குதலில் போது, தேசமே துயரத்தில் ஆழ்ந்தபோது, சிலர் அரசியல் சுயநலத்தோடு விமர்சித்ததாக கூறினார். 'மண்ணும் இமயமலை எங்கள் மலையே...' என்ற பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டிய பிரதமர், சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில்,  ஒரே இந்தியா என்பது உறுதி செய்யப்பட்டதாக கூறினார்.

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் 

இதைத்தொடர்ந்து,  கெவாடியாவில், இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  பின்னர், அங்கிருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் ஏறி பிரதமர் மோடி பயணம் செய்தார். இந்த சேவை மூலம் கெவாடியாவில் இருந்து சபர்மதி ஆற்றங்கரை இடையிலான பயண தூரம் 4 மணியில் இருந்து 45 நிமிடங்களாக குறையும் எனக் கூறப்படுகிறது. 14 பயணிகள் வரை சுமந்து செல்லும் வகையிலான பிரிவு 2பி வகை மிதவை விமானங்கள், தினமும் எட்டு தடவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான முதல் கடல் விமான சேவை இந்தியாவுக்கு புது சகாப்தம் என அனைவராலும் பாராட்டப்படுகிறது.  



Next Story

மேலும் செய்திகள்