"வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத மோடி" - தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக தேஜஸ்வி குற்றச்சாட்டு

வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலையில் எங்கள் குடும்பம் மீது தனிநபர் தாக்குதல் நடத்துகிறார் என தேஜஸ்வி யாதவ் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டி உள்ளார்.
வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத மோடி - தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக தேஜஸ்வி குற்றச்சாட்டு
x
எதிர்மறை நிலையில் உள்ள நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைக்க முடியாத நிலையிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலையிலும், தங்கள் குடும்பத்தின் மீது, பிரதமர் நரேந்திர மோடி குற்றச் சாட்டுகளை சுமத்தி வருவதாக தேஜஸ்வி யாதவ் சாடியுள்ளார். பாட்னாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், பிரதமராக உள்ள ஒரே காரணத்தால் நரேந்திர மோடி கூறுவது எல்லாம் சரியா எனவும்   கேள்வி எழுப்பியுள்ளார்.     கடந்த 15 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று உள்ளதாக குற்றம்சாட்டிய தேஜஸ்வி, பீகார் காவல் நிலையங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கு பின்னர் நிதிஷ்குமார் உடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என தேஜஸ்வி தெரிவித்துள்ளார். 






Next Story

மேலும் செய்திகள்