"மருத்துவ இடங்களில் இந்த ஆண்டு ஓபிசி இடஒதுக்கீடு இல்லை" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
மருத்துவ இடங்களில் இந்த ஆண்டு ஓபிசி இடஒதுக்கீடு இல்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து
x
மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய அளவில் ஒதுக்கப்படும் இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்து இருப்பது, அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தை, உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பதாக  கூறியுள்ளார். மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு துரோகம் இழைத்திருப்பதாகவும், பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்