"தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்

50 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஏமாற்றமளிப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்
x
ஓ.பி.சி. மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஏமாற்றமளிப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வதும் என, தொடர்ந்து தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதாகவும், அவர் கூறியுள்ளார். தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து உரிய நீதியை பெற்றுத்தரும்படியும் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்