சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் களம் - வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள்

பீகாரில் 3 கட்டங்களாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மாநிலத்தில் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கப் போகும் சக்திகளாக இளம்பெண் வாக்காளர்கள் விளங்குவார்கள் என கணிக்கப்படுகிறது.
சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் களம் - வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள்
x
சமூகத்திலும், வாழ்விலும் முக்கிய பங்காற்றும் பெண்கள் அரசியலிலும், அரசியல் சக்திகளை தீர்மானிப்பதிலும் பெரும் பங்காற்ற வேண்டும். அதுவே, ஜனநாயகத்தின் பலமாகும். இந்த கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இளம் பெண் வாக்காளர்கள் இருப்பார்கள் என கணிக்கப்படுகிறது. மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையில் இளம் பெண்கள் இந்த சட்டப் பேரவை தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்று உள்ளனர். குறிப்பாக, முசாபர்பூர், மேற்கு சம்பாரண், கிழக்கு சம்பாரண், வைஷாலி, சீதாமரி, தர்பங்கா உள்ளிட்ட மாவட்டங்களில் இளம் பெண் வாக்காளர்கள் தேர்தல் வெற்றி-தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். தேர்தலில் பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும், மகளிர் மேம்பாட்டு திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்த வேண்டும். பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விடுதி வசதியை செய்து தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை இளம் பெண்கள் முன்வைக்க தொடங்கி உள்ளனர்.  அவர்களுடைய இந்த கோரிக்கைகள் தற்போது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.  பாலின வேறுபாடு அதிகமுள்ள மாநிலம் எனக் கூறப்படும் பீகாரில் பெண்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க தொடங்கிவிட்டனர். கடந்த 2015 சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆண்களைவிடவும் பெண்களே அதிகமாக தங்களுடைய வாக்கை பதிவு செய்துள்ளனர். இப்போதைய தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் சக்தி உருவெடுத்துள்ளது ஜனநாயகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்