பீகார் தேர்தல் - பிரதமர் மோடி பிரசாரம்
பதிவு : அக்டோபர் 24, 2020, 08:20 AM
பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி உறுதி பட தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள பீகாரில் உள்ள சசாராம் தொகுதிக்கு உட்பட்ட டெஹ்ரி என்னும் இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கொரோனாவிற்கு எதிரான போரை பீகார் முன்னெடுத்து செல்கிறது என்று தெரிவித்த பிரதமர் , கொரோனாவிற்கு எதிராக பீகார் தைரியமாக போராடி வருகிறது என்று கூறினார். ஜனநாயக திருவிழாவை அனைத்து முன்னெச்சரிக்கையுடன் பீகார் மக்கள் கொண்டாடுகின்றனர் என்று கூறிய பிரதமர், ஏழை மக்களுக்காக கடைசி வரை போராடிய ராம்விலாஸ் பஸ்வான் இழப்பு ஈடுசெய்ய முடியாதுது என தெரிவித்தார். பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த பீகார் மக்கள் தயாராகி விட்டனர் என்றும் பேசினார். இருளில் இருந்து மீண்ட பீகார் மக்கள் மீண்டும் இருளுக்கு செல்ல மாட்டார்கள் என்று கூறிய மோடி, முன்பு இருந்த நிலை பீகாரில் தற்போது இல்லை என சுட்டிக்காட்டினார். பீகார் மக்கள் எந்த அச்சமும் இன்றி வாழ்ந்து வருகின்றனர் என்று கூறிய மோடி, சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளாகவும் தெரிவித்தார். பீகாரில் பல ஆண்டுகளாக காட்டாட்சி தர்பார் நடைபெற்று வந்தது என்றும், தற்போது, நிதீஷ் குமாரின்ஆட்சியின் சிறப்புகளை கண்கூடாக காண முடிகிறது என்றும் அவர் பேசினார். பல்வேறு அறிக்கைகளும் கருத்துக்கணிப்பு முடிவுகளும், தேசிய ஜனநாயக கூட்டணி, பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருப்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினர். லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இந்த அரசு எடுத்த முடிவுகளில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது என்பதை இந்த மண்ணிலிருந்து அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். 

பிற செய்திகள்

கொரோனாவுக்கு பாஜக எம்.எல்.ஏ. மரணம் - 21 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கிரண் மகேஷ்வரி கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

16 views

கட்சி குறித்து தானே அறிவிப்பதாக ரஜினி பேச்சு - பொறுமையாக இருங்கள் - ரஜினி வேண்டுகோள்

சென்னையில், மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடர்பாக தானே முடிவெடுத்து அறிவிக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

94 views

"கொரோனா காலத்தில் தமிழகம் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது" - அமைச்சர் எம்.சி. சம்பத்

கொரோனா காலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவி்த்துள்ளார்.

63 views

சமஸ்கிருத செய்தி தொகுப்பிற்கு ஸ்டாலின் கண்டனம்

சமஸ்கிருத செய்தி தொகுப்பை பொதிகை மற்றும் பிற மாநில மொழி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

168 views

வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி சலோ பேரணி : புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது - விவசாயிகள் திட்டவட்டம்

டெல்லியில் உள்ள புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது என, விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

279 views

"சமஸ்கிருத செய்திகளை திணிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்" - மத்திய அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சமஸ்கிருத செய்திகளை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

169 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.