370-வது அரசியல் சாசன சட்டத்தை நீக்கிய முடிவு - மத்திய அரசு திரும்பப் பெற ப.சிதம்பரம் வலியுறுத்த​ல்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370 -வது அரசியல் சாசன சட்டத்தை நீக்கிய முடிவை, பா.ஜ.க. அரசு ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
370-வது  அரசியல் சாசன சட்டத்தை  நீக்கிய முடிவு - மத்திய அரசு திரும்பப் பெற ப.சிதம்பரம் வலியுறுத்த​ல்
x
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370 -வது  அரசியல் சாசன சட்டத்தை  நீக்கிய முடிவை, பா.ஜ.க. அரசு ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், சட்டத்திற்குப் புறம்பாக கடந்தாண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மோடி அரசால் எடுக்கப்பட்ட முடிவு ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நிலை நிறுத்தவும், ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மக்களின் உரிமைகள் நிலை நிறுத்த,  ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தை சார்ந்த பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசியலமைப்பு போரை முன்னெடுத்து இருப்பது நல்ல முன்னேற்றம் என்று தெரிவித்துள்ள ப.சிதம்பரம், இந்திய மக்கள் அனைவராலும் இது வரவேற்கப்பட வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்