பீகாரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் - அக்டோபர் 28 தொடங்கி நவம்பர் 7 வரை சட்டமன்ற தேர்தல் நடக்கிறது

பீகாரில்3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில தேர்தல் கூட்டணிகள் குறித்து இப்போது பார்ப்போம்.
பீகாரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் - அக்டோபர்  28 தொடங்கி  நவம்பர் 7 வரை  சட்டமன்ற தேர்தல் நடக்கிறது
x
பீகார் மாநிலத்தில் அக்டோபர்  28 தொடங்கி  நவம்பர் 7 வரை 3 கட்டமாக  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் ஆளும்  தேசிய ஜனநாயக கூட்டணியை
எதிர்த்து தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி போட்டியிடுகிறது. மொத்தம் 243 இடங்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற 122 இடங்கள் தேவைப்படுகிறது.  நிதீஷ் குமார்  தலைமையிலான ஐக்கிய ஜனாத தளம், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் ஆகியவை முக்கிய கட்சிகள் ஆகும்.   20 வருடங்களுக்கு முன்பு பீகாரின் வலிமை
வாய்ந்த முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் ,கால் நடை தீவன ஊழல் வழக்குகளில் சிறை தண்டனனை விதிக்கப்பட்டு ஜார்காண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் உள்ள மத்திய சிறை மருத்துவமனையில், கடந்த
சில ஆண்டுகளாக உள்ளார். லாலு பிரசாத் யாதவ்வின்  மகன் தேஜஸ்வி யாதவ் ராஷ்ட்ரிய ஜனதா தளம்கட்சியை வழி நடத்தி வருகிறார்.  2014வரை பாஜகவுடன் கூட்டணியில் இருந்த நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், 2015 சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 178 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. நிதீஷ் குமார் முதலமைச்சராகவும் , தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். ஆனால்2017  ஆண்டு  இந்த கூட்டணியை விட்டு வெளியேறிய நிதீஷ் குமார், மீண்டும் பாஜகவுடன்
கூட்டணி அமைத்து, முதலமைச்சராக  தொடர்ந்தார்.  இதுவரை மிக அதிக இடங்களில் போட்டியிட்ட நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், இந்த முறை 115 இடங்களிலும், பாஜக 110 இடங்களிலும், விகாஷீல் இன்சான் கட்சி 11 இடங்களிலும், ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையிலான எல்ஜேபி கட்சி இந்த கூட்டணியில்இருந்து விலகி விட்டது. மஹாகட்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 144 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 70 இடங்களிலும், சி.பி.ஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி 19 இடங்களிலும், சி.பி.ஐ 6 இடங்களிலும்,
சி.பி.எம் 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன. முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹா தலைமையிலான சிறிய கட்சிகளின் கூட்டணி சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் பல சிறிய கட்சிகளும் களத்தில் உள்ளன.  இதுவரை வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள், நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணி, சுமார் 141 முதல் 161 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்