விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியின் நி​லை என்ன? - பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி கேள்வி

2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் விவசாயிகளுக்கு, குறைந்த பட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை ராகுல்காந்தி சுட்டிக்காட்டி உள்ளார்.
விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியின் நி​லை என்ன? - பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி கேள்வி
x
2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் விவசாயிகளுக்கு, குறைந்த பட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை ராகுல்காந்தி சுட்டிக்காட்டி உள்ளார். ஆட்சி பொறுப்புக்கு வந்த மோடி அரசு, 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, அவ்வாறு வழங்குவது சாத்தியமில்லை என கூறி, தேர்தல் வாக்குறுதியில் இருந்து பின்வாங்கியதோடு, தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிக்கு நேரெதிர் நிலைப்பாடாக, ஒரு கறுப்புச் சட்டத்தை தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளதாக ராகுல் காந்தி சாடியுள்ளார். புதிதாக விவசாயிகளுக்கு எதிரான மோடியின் நிலைப்பாடு, எண்ணம் தெளிவாக உள்ளதாக தெரிவித்துள்ள ராகுல்காந்தி,  விவசாயிகளின் வாழ்வாதார வேரை அடியோடி அகற்றும் பிரதமர் மோடியின் நடவடிக்கை, அவரது முதலாளித்துவ நண்பர்களுக்கு நல்ல வளர்ச்சி என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்