விமான நிலையங்கள் தனியார் மயமாக்கல் விவகாரம் - மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கம்

விமான நிலையங்கள் தனியார் மயமாக்கல் காரணமாக ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
விமான நிலையங்கள் தனியார் மயமாக்கல் விவகாரம் - மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கம்
x
விமான நிலையங்கள் தனியார் மயமாக்கல் காரணமாக ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள நெருக்கடியான சூழ்நிலையில், விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு ஏதும் முடிவு செய்து உள்ளதா ?  திடீரென தனியார் மயமாக்கல் ஏன் ? அதற்கான காரணம் என்ன ? என மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் வில்சன் எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார். நாட்டில் 6 விமான நிலையங்களை ஏலம் எடுக்க 31 தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விருப்பம் வந்துள்ளதாகவும்,  இந்த நடவடிக்கையால், ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என  மத்திய அரசுதெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் விமான நிலைய தேவையை பூர்த்தி செய்யவே தனியார் துறையின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.  தனியார் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெறப்படும் வருவாய் மூலம் மற்ற விமான நிலையங்களின் மேம்பாட்டு வளர்ச்சி பணி மேற்கொள்ள முடியும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்