சித்த மருத்துவத்தை புறக்கணிப்பது ஏன்? - மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கேள்வி

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் வரும் யுனானி உள்ளிட்ட அனைத்து இந்திய மருத்துவ முறைகளுக்கும், மத்திய அரசு சம வாய்ப்பு வழங்க மறுப்பது ஏன் என தி.மு.க. எம்.பி. சண்முகம் மாநிலங்களவையில் கேள்வி எழுப்புயுள்ளார்.
x
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் வரும் யுனானி உள்ளிட்ட அனைத்து இந்திய மருத்துவ முறைகளுக்கும், மத்திய அரசு சம வாய்ப்பு வழங்க மறுப்பது ஏன் என தி.மு.க. எம்.பி. சண்முகம் மாநிலங்களவையில் கேள்வி எழுப்புயுள்ளார். ஆயுர்வேதத்தில் தலைசிறந்த கல்வி மற்றும் சிகிச்சை மையங்கள் கோவை, கோட்டக்கல், ஐதராபாத் போன்ற தென் மாநிலங்களில் உள்ள நிலையில், ஆளும் கட்சி ஆளும் மாநிலமான குஜராத்தை சேர்ந்த 3 நிறுவனங்களை தேசிய அந்தஸ்த்துக்கு தரம் உயர்த்தியதன் நோக்கம் என்ன? என்றும், அதற்கான அடிப்படை கூறுகள் என்ன என்றும் தி.மு.க. எம்.பி.சண்முகம் கேள்வி எழுப்பினார். மேலும். ஆயுஷ் அமைச்சகத்தில் ​இணை கட்டுப்பாட்டு அலுவலர் பதவிக்கு சித்த மருத்துவத்தை புறக்கணித்து விட்டு, ஆயுர்வேத பிரிவை சேர்ந்த ஒருவருக்கு முக்கியத்துவம் அளித்தது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். உள்நாட்டு முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. அரசின் கூற்று என்னாச்சு என்றும் தி.மு.க. எம்.பி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்