"4 சுவர்களுக்குள் மாணவர்கள் படிக்கும் நிலையை மாற்ற வேண்டும்" - பிரதமர் மோடி

4 சுவர்களுக்குள் மாணவர்கள் படிக்கும் நிலையை மாற்றி, மாணவர்கள் சுயமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
x
"21ஆம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி" என்ற தலைப்பில் மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம்  கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கையை அமைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.15 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர், 4 சுவர்களுக்குள் மாணவர்கள் படிக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். வெளியுலகில் மாணவர்கள் கற்க வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளதாகவும் கூறினார். சீனாவில் குழந்தைகளை காடுகளுக்கு அழைத்துச்சென்று இயற்கையை கற்றுத்தருகிறார்கள் என்று கூறிய பிரதமர் மோடி, குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது சீனாவின் கல்வி முறை பற்றி தாம் அறிந்துகொண்டதாக நினைவுகூர்ந்தார். சுற்றுச்சூழல் பற்றிய அறிவு மாணவர்களுக்கு மிகவும் முக்கியம் என்று தெரிவித்த பிரதமர் மோடி, வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், விவசாய நிலங்கள் என பல இடங்களில் மாணவர்களுக்கு அறிவை புகட்ட முடியும் என்றும், மாணவர்கள் சுயமாக கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்