பிரதமரின் "சுவநிதி சம்வாத்" திட்டம் - சாலை வியாபாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி உரையாடல்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாலையோர வியாபாரிகளுடன் சுவநிதி சம்வாத்' என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.
x
கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று, சுவநிதி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. மத்தியப் பிரதேசத்தில் 4.5 லட்சம் சாலையோர வியாபாரிகள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர். இதில்  தகுதியுடைய 2.45 லட்சம் பயனாளிகளின் விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு, 140 கோடி ரூபாய், நிதியுதவியை ஒரு லட்சத்து 40 ஆயிரம் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு சில வியாபாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாடினார்

Next Story

மேலும் செய்திகள்