கொரோனா தொற்று, ஊரடங்கு தொடர்பாக பிரதமர் ஆலோசனை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார்.
கொரோனா தொற்று, ஊரடங்கு தொடர்பாக பிரதமர் ஆலோசனை
x
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நிதி ஆயோக் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். டெல்லியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த முயற்சிகளை பாரட்டிய பிரதமர், இதர மாநிலங்களுடன் இதேபோன்ற  அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.  பொது இடங்களில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சமூக ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்