சீனா - பாகிஸ்தான் இருந்து மின் கருவிகள் இறக்குமதி - மத்திய அரசு புதிய உத்தரவு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்துறை அமைச்சர்கள் மாநாடு காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது.
சீனா - பாகிஸ்தான் இருந்து மின் கருவிகள் இறக்குமதி - மத்திய அரசு புதிய உத்தரவு
x
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்துறை அமைச்சர்கள் மாநாடு காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய மத்திய மின்துறை மற்றும் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங், சீனா, பாகிஸ்தானில் இருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்காது என தெரிவித்தார். சீனா மற்றும் பாகிஸ்தானை முன் குறிப்பு நாடுகளின் பட்டியலில் வைக்க முடிவு செய்து உள்ளதாகவும், முன் அனுமதியின்றி சீனா மற்றும் பாகிஸ்தானிலிருந்து எந்த மின் சாதனங்களையும் இறக்குமதி செய்ய இனிவரும் காலங்களில் முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்