தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது - தி.மு.க. எம்.பி., செந்தில்குமார் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது என தர்மபுரி தொகுதி திமுக எம்.பி.செந்தில்குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது - தி.மு.க. எம்.பி., செந்தில்குமார் குற்றச்சாட்டு
x
தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது என தர்மபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார் கூறியுள்ளார். சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதியை கடத்தியதாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். தமது தாயாருடன் செல்ல விரும்புவதாக இளமதி கூறியதால் போலீசார் அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து தமது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க. எம்.பி. செந்தில்குமார், தைரியம் இருந்தால் இளமதியை தனியாக ஊடகத்தை சந்திக்க அனுப்புமாறு கூறியுள்ளார். அவ்வாறு செய்தால், உங்கள் முகத்திரை கிழிந்து, சாயம் வெளுக்கும் என்றும், அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்