மத்தியப் பிரதேச அமைச்சரவையில் இருந்து 6 பேர் விடுவிப்பு - முதலமைச்சர் கமல்நாத் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நடவடிக்கை

மத்தியப் பிரதேச அமைச்சரவையில் இருந்து 6 அமைச்சர்களை விடுவித்து அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச அமைச்சரவையில் இருந்து 6 பேர் விடுவிப்பு - முதலமைச்சர் கமல்நாத் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நடவடிக்கை
x
மத்தியப் பிரதேச அமைச்சரவையில் இருந்து 6 அமைச்சர்களை விடுவித்து அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார். இமார்த்தி தேவி, துல்சி சிலாவட், கோ​விந்த் சிங் ராஜ்புத், மகேந்திர சிங் சி​சோ​டியா,  பிரதியுமான் சிங் தோமர் மற்றும் பிரபுராம் சவுத்ரி ஆகி​யோரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் பரிந்துரை செய்திருந்தார். விடுவிக்கப்பட்ட 6 பேரும் அண்மையில் பா.ஜ.க.வுக்கு கட்சி மாறிய ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்