ம.பி மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் - ம.பி.யில் அடுத்த ஆட்சியை அமைக்க தயாராகும் பாஜக

போபாலில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
ம.பி மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் - ம.பி.யில் அடுத்த ஆட்சியை அமைக்க தயாராகும் பாஜக
x
போபாலில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல் மற்றும் மாநில பாஜக தலைவர்கள் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க தவறி ஆட்சி கவிழும் பட்சத்தில், தாங்கள் ஆட்சியமைக்க தயாராகும்படி எம்.எல்.ஏக்களுக்கு பாஜக தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

முன்னதாக, காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. ராஜேஷ் சுக்லா, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. சஞ்சீவ் குஷ்வாலா இருவரும் பாஜகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சவுஹானை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதனால், காங்கிரசின் பலம் மேலும் குறைந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்