"இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு வலுப்பெறும்" - 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்

இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவை நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி, அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு வலுப்பெறும் - நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்
x
குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டோல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி,  உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தால் அதிபர் டிரம்ப் மனதார வரவேற்கப்படுவதாகவும், இதனால் நாடு உற்சாகமாக உள்ளது என்றார்.  கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி,  இன்று தமது நண்பர் இந்திய பயணத்தை நமஸ்தே டிரம்ப் உடன் துவங்குகிறார் என்றார். அதிபர் டிரம்பின் வருகை ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், டிரம்ப் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு பல செயல்களை செய்திருக்கிறார் என மோடி புகழாரம் சூட்டினார். இந்தியா-அமெரிக்க உறவுகள் மிக பெரிய மற்றும் நெருக்கமான உறவு என்றும், சுதந்திர சிலை  பற்றி பெருமை கொள்ளும் அதே நேரத்தில், ஒற்றுமை சிலை குறித்து பெருமிதம் கொள்ளும் தருணம் இது என்றார். இரு நாட்டு உறவுகளை இந்த நிகழ்ச்சி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்றும், அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது, அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது, அமெரிக்கா எப்போதும் இந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக இருக்கும் என பிரதமர் மோடி உரையாற்றினார். 

Next Story

மேலும் செய்திகள்