11வது ராணுவ தளவாட கண்காட்சி தொடக்கம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 11வது ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
11வது ராணுவ தளவாட கண்காட்சி தொடக்கம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்
x
இந்தியாவின் படைக்கலன் துறை சார்ந்த உற்பத்தியை சர்வதேச அரங்கில், பறைசாற்றும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மெகா கண்காட்சியில் 70 நாடுகள் மற்றும் 172 வெளிநாட்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் இருந்து, ராணுவ பொருட்களை உற்பத்தி செய்யும் 856 நிறுவனங்கள், தங்களது பொருட்களை கண்காட்சியில் இடம்பெற செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் பரிமாற்றம் கண்ட ராணுவ உற்பத்தி என்ற மையக்கருத்துடன் இந்த ஆண்டு கண்காட்சி நடைபெறுகிறது.  கண்காட்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராணுவ டாங்கிகள், ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கண்டுகளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்