"வாக்கு வங்கிக்காக அரசியல் செய்கிறார்கள்" - டெல்லி பிரசார கூட்டத்தில் நட்டா குற்றச்சாட்டு

டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
வாக்கு வங்கிக்காக அரசியல் செய்கிறார்கள் - டெல்லி பிரசார கூட்டத்தில் நட்டா குற்றச்சாட்டு
x
டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பட்டேல் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வதந்தியை பரப்புவதாக குற்றம்சாட்டினார். வாக்கு வங்கிக்காக அவர்கள் அரசியல் செய்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டங்களின் பின்னணியில் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் இருப்பதாக நட்டா விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்