பாகிஸ்தான் விமானி மகனுக்கு பத்மஸ்ரீ விருதா? - மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

பாகிஸ்தான் விமானப்படை விமானியாக இருந்த அர்ஷாத் சமிகானின் மகனான இந்தி பாடகர் அட்னன் சமிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுக்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் விமானி மகனுக்கு பத்மஸ்ரீ விருதா? - மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
x
பாகிஸ்தான் விமானப்படை விமானியாக இருந்த அர்ஷாத் சமிகானின் மகனான இந்தி பாடகர் அட்னன் சமிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுக்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக சண்டை போட்டவரின்  குடும்பத்தை சேர்ந்த அட்னன் சமிக்கு  பத்ம ஸ்ரீ விருது தந்து கவுரவிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கேள்வி எழுப்பியுள்ளார். கார்கில் போரில் இந்தியாவுக்காக சண்டை போட்ட முன்னாள் ராணுவ அதிகாரி முகமது சனவுல்லா, அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புக்கு பின்னர், வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டுள்ளதாக  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்