டெல்லியில் பழைய வெற்றியை தக்க வைக்குமா ஆம் ஆத்மி கட்சி?

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 8 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
டெல்லியில் பழைய வெற்றியை தக்க வைக்குமா ஆம் ஆத்மி கட்சி?
x
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 8 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. டெல்லி மாநிலத்தில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த மக்கள் வசித்தாலும்,  பெரும்பான்மையாக வசிக்கும் மக்கள் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். கிழக்கு உத்தர பிரதேசம், பீகார் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த மக்கள் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் பேர் உள்ளனர். உத்தம் நகர், விகாஸ்புரி, ஆதர்ஷ் நகர், பதர்பூர், புராரி, லட்சுமி நகர், கிருஷ்ணா நகர், காந்தி நகர் உள்ளிட்ட 24 தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பூர்வாஞ்சல் மக்கள் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநில தலைவரும் அமைச்சருமான கோபால் ராய் பூர்வாஞ்சல் பகுதியை சேர்ந்தவர். கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியில் மட்டும் பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த 12 பேர் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பூர்வாஞ்சல் பகுதி மக்கள் வசிக்கும் காலனிகளில் மேம்பாட்டு பணிகளுக்கு மட்டும் சுமார் ஆயிரம் கோடி ரூபாயை  ஆம் ஆத்மி அரசு செலவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை  பூர்வாஞ்சல் மக்களின் மொழியான மைத்திலியை விருப்பப் பாடமாக எடுத்து பயிலவும், யு.பி.எஸ்.சி. தேர்வு பயிற்சிக்கும்  ஆம் ஆத்மி அரசு வழிவகை செய்துள்ளது. மைத்திலி, போஜ்புரி ஆகிய மொழிகளின் மேம்பாட்டுக்கு பண்பாடு, கலை, நாடகம் ஆகிய புலங்களில் பாடுபடும் கலைஞர்கள் கௌரவிக்கப் படுவார்கள் என்றும் ஆம் ஆத்மி  அரசு அறிவித்துள்ளது. பூர்வாஞ்சல் மக்கள் கொண்டாடும் சாத் பூஜையை அரசு விடுமுறையாக கெஜ்ரிவால் அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு அறிவித்தது. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பூர்வாஞ்சல் மக்கள் மாறி உள்ள நிலையில், பீகாரை சேர்ந்த அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்க பூர்வாஞ்சல்  மக்கள் கைகொடுப்பார்களா... இல்லையா என்பது வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி தெரிய வரும்...

Next Story

மேலும் செய்திகள்