அமைச்சரவை கூட்டத்திற்கு பேருந்தில் வந்த அமைச்சர்...
புதுச்சேரியில் அமைச்சரவை கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அமைச்சர் பேருந்தில் பயணித்து வந்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கமலக்கண்ணன். இவரது காருக்கு, அரசு டீசல் போட மறுக்கப்பட்டதால் அவர், தமது வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். பின்னர், அங்கிருந்து கருப்பு சட்டை அணிந்த படி, பேருந்தில், பயணித்து, அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் கட்டணம் நிலுவையில் உள்ளதால் டீசல் போட மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Next Story