டெல்லியில் இன்று காங்கிரஸ் போராட்டம் - சோனியாகாந்தி, ராகுல் காந்தி பங்கேற்கிறார்கள்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் இன்று காங்கிரஸ் தர்ணா போராட்டம் நடத்துகிறது.
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்துகின்றனர். இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story